எப்படி இருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா... தனியார் மருத்துவமனை அறிக்கை..!!
 

 
1

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், குடும்பத்தினர் ஆலோசனைப்படி சென்னை அமைந்தகரையில் உள்ள  எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்.ஜி.எம் மருத்துவமனை, பாரதிராஜாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் உடல் நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்ட அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அவர் உடல்நிலை நல்ல நிலையில் சீராக இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றொரு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. ''கடந்த 26-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1

From Around the web