கோப்ரா படம் எப்படி இருக்கு ..? ட்விட்டர் விமர்சனம்

 
1

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' திரைப்படம் உருவாகியுள்ளது. கேஜிஎப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி  கதாநாயகியாக நடித்துள்ளார்.

cobra movie

மேலும் இப்படத்தில் இர்பான் பதான், மியா, கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ சங்கர், ரோஷன் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

3 ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் முதலில்   இந்தப் படம்   ஆகஸ்ட் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று  அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால்  இறுதிக் கட்ட பணிகள் நிறைவு பெறாததால்  படத்தின் ரிலீஸ் தேதி 31-ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  லலித் குமாரின் 7 ஸ்கிரீன் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.    விக்ரம் 20-க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடித்து அசத்தியிருக்கும் இந்தப் படத்திற்கு அண்மையில் தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் அளித்திருந்தது.  

1

யுகே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் சினிமா மற்றும் பேஷன் விமர்சகரான உமைர் சந்து, சீயான் விக்ரமின் கோப்ராவின் முதல் விமர்சனத்தையும் ஸ்கோரையும் ட்விட்டரில் வெளியிட்டார் .

அருமையான க்ளைமாக்ஸ், டைரக்ஷன் மற்றும் ஒரு தனித்துவமான கான்செப்ட் ! விக்ரம் சிறப்பாக நடித்தார், விருதுக்கு தகுதியானவர்! அவர் நிகழ்ச்சியை முழுவதுமாக திருடினார். எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட அழுத்தமான திரைப்படம்! மல்டிபிளக்ஸ் ரசிகர்கள் அதை ரசிப்பார்கள் 3.5/5 என பதிவித்துள்ளார்  

From Around the web