'விக்ரம்' படத்தில் சூர்யாவுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
Mon, 6 Jun 2022

கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில்,இதில் சூர்யா ஒரு கொடூர வில்லனாக அடுத்த கைதி மற்றும் விக்ரம் படங்களுக்கு லீட் கொடுப்பது போல வந்திருப்பார்.
இதன்மூலம் அடுத்து வரும் விக்ரம் 3 மற்றும் கைதி 2 படங்களில் முக்கிய வில்லனாக கமல் மற்றும் கார்த்திக்கு எதிராக சூர்யா வில்லனாக தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் 'விக்ரம்' படத்தில் சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஐந்து நிமிடங்களே வரும் காட்சியில் நடிப்பதற்காக ஒரு நாள் செலவழித்த சூர்யா எந்தவித சம்பளமும் வாங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.