கணவன் - மனைவி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்..!! 

 
1

மைதிலி என்னை காதலி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார் அமலா. 5 படங்கள் (நிர்ணயம், சிவா, பிரேம யுத்தம் , கிராயி தாதா படங்களில் நடித்து, காதலில் விழுந்த அமலாவும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் 1992-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இது நாகர்ஜுனாவின் 2-வது திருமணம். 1984-ல் நடிகர் வெங்கடேஷின் சகோதரி லக்‌ஷ்மி டகுபதியைத் திருமணம் செய்துகொண்ட நாகார்ஜுனா, 1990-ல் விவாகரத்து செய்துகொண்டார். (நாகார்ஜுனா - லக்‌ஷ்மியின் மகன் தான், நடிகர் நாக சைதன்யா.) அமலா, திருமணத்துக்குப் பிறகு நடிப்பதிலிருந்து விலகிக் கொண்டார். 2012-ல் மீண்டும் நடிக்க வந்தார். இருவருக்கும் அகில் என்ற மகன் உண்டு.  

இந்த நிலையில் நாகார்ஜுனா தற்போதும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நிலையில் திருமணத்திற்கு பின் நடிக்காமல் இருந்த அமலா நீண்ட இடைவெளிக்கு பின் ’கணம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அமலா நடித்த ’கணம்’ திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவரது கணவர் நாகார்ஜூனா நடித்த ‘பிரம்மஸ்திரா’ என்ற திரைப்படம் அதே நாளில் வெளியாக இருக்கிறது. 


திரையுலகில் நட்சத்திரமாக இருக்கும் கணவன்-மனைவியின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From Around the web