எனக்கு நித்யானந்தாவை ரெம்ப பிடிக்கும்... அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் - பிரியா ஆனந்த்..!!

 
1

ஜெய் நடிப்பில் வெளியான ‘வாமனன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம்  உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

Priyanand

நடிகர் சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த் வெளியான எதிர்நீச்சல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, சிவா நடிப்பில் வெளியான ‘வணக்கம் சென்னை’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். தற்போது சுமோ, காசேதான் கடவுளடா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நடிகை பிரியா ஆனந்த் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நித்தியானந்தா குறித்து பதிவிட்டு வரும் நடிகை பிரியா ஆனந்த், யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், எனக்கு நித்யானந்தாவை ரெம்ப பிடிக்கும். அவர்மீது பல கடுமையான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் வந்து கொண்டிருந்தாலும் தற்போதும் பலர் அவரை தங்கள் கடவுளாக வழிபடுகின்றனர். முடிந்தால், நான் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நித்தியானந்தாவை கல்யாணம் செய்தால் பிரியா ஆனந்த் அப்டின்னு இருக்கிற அவங்க பேரை கூட மாத தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Priya-Nithi

நித்யானந்தா தன்னைத்தானே ‘கடவுள்’ என்று அறிவித்துக் கொண்டவர். அவர் மீது கற்பழிப்பு மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் இந்தியாவில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார். அதன்பிறகு, அவர் கைலாசா என்ற தனது சொந்த தீவு நாட்டை ஸ்தாபிப்பதாகவும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web