ஒரு இந்தியன் பிரிட்டிஷ் பெண்ணை காதலித்தால்...காமெடி ஜானரில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ டிரெய்லர் ! 

 
1

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில்  முழுக்க முழுக்க காமெடி ஜோனரில் உருவாகி வரும் படம் பிரின்ஸ். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படம் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி வெளியாகவுள்ளது.  படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  பிரின்ஸ் படத்தின் டிஜிட்டல் உரிமைகளை விஜய் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. தொலைக்காட்சி மற்றும் ஓடிடி வெளியீட்டு உரிமைகளை விஜய் டிவி நிறுவனம் சுமார் 45 கோடிக்கு வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக இளைஞனுக்கும், பிரிட்டிஷ் பெண்ணுக்கும் இடையேயான காதல் கதையே இப்படத்தின் கதைக்களம். 

From Around the web