அங்க ஒருத்தன் வாழணும்னா இன்னொருத்தன் சாகனும்..!! வெளியான ‘13’ படத்தின் டீசர்..!!  

 
1

நடிகர் ஜிவி பிரகாஷ், நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'செல்ஃபி'. வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மதிமாறன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் இணைந்து நடித்திருந்தனர். நீட் தேர்வை வைத்து நடைபெறும் மோசடிகளை தோலூரித்துக் காட்டும் படமாக உருவான இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கெளதம் மேனன் ஆகிய இருவரின் நடிப்பும் கவனம் பெற்றது. 

இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் மற்றும் கெளதம் மேனன் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்தப் படத்தை விவேக் இயக்கி வருகிறார். நடிகை ஆத்யா பிரசாத் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு சித்து குமார் என்பவர் இசையமைக்கிறார்.

ஒரு மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. கடந்த மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மாறுப்பட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

From Around the web