பொம்பளையை கதறவிட ஆம்பளையா இருந்தா மட்டும் பத்தாது...!! த்ரிஷாவின் ‘ராங்கி’ டிரெய்லர் வெளியானது..!
Sun, 25 Dec 2022

நடிகை திரிஷாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராங்கி'. அப்படியென்றால் அடங்காத, துணிச்சல் மிகுந்த பெண் என்று பொருள். ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ’எங்கேயும் எப்போதும்’ படத்தின் இயக்குனர் எம்.சரவணன் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ரொமென்ஸ் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த திரிஷா, இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது