இப்படி ஒரு நிலைமை உங்கள பெத்தவங்களுக்கு வந்தா நீங்க இத செய்வீங்களா?சமுத்திரகனியின் ‘தலைக்கூத்தல்’ டிரெய்லர் வெளியீடு ! 

 
111

கருணைக்கொலையை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள படம் ‘தலைக்கூத்தல்’.இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை 'லென்ஸ்', 'தி மஸ்கிடோ பிலாசபி' ஆகிய படங்களை இயக்கிய ஜெய பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

கிராமபுறநடை முறையில் இருக்கும் ஒரு வகை கருணைக்கொலை தான் இந்த தலைக்கூத்தல்.அதாவது வீட்டில் பாரமாக இருக்கும் முதியோர்களை ‘தலைக்கூத்தல்’ என்ற பெயரில் கொலை செய்கின்றனர். இந்த கொடுமையான சடங்கை சுட்டிக்காட்டும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. 

இந்த படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

From Around the web