வருஷா வருஷம் ஒரு பெண்ணை லவ் பண்ணா அது லவ் இல்லடா கண்ணா..!! வெளியான ‘காலங்களில் அவள் வசந்தம்’... டிரெய்லர்..!

 
1

அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கௌஷிக் ராம் என்பவர் நடிகராக அறிமுகமாகும் படம் காலங்களில் அவள் வசந்தம். ‘நெடுநல்வாடை’ படத்தில் நடித்த அஞ்சலி நாயர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.. இதுதவிர விஜே விக்னேஷ்காந்த், சுவாமிநாதன், அனிதா சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரொமான்ஸ் ஜேர்னரில் இந்தப் படம் உருவாகிறது. படம் நான்கு சீசன்களில் பயணிக்கிறது.

இந்தப் படம் திருமணத்திற்குப் பிறகும் நான்கு பருவங்களில் நடக்கும் காதலை விவரிக்கிறது. இந்தக் காலகட்டங்களில் காதல் என்றால் என்ன என்பதை ஹீரோ புரிந்துகொள்வார். படத்தில் வில்லன் கதாபாத்திரங்கள் இல்லை என்பது கூடுதல் தகவல்.

இப்படம் வரும் அக்டோபர் 28-ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

From Around the web