தவறை நிரூபித்தால் படம் இயக்குவதை விட்டுவிடுகிறேன் - இயக்குநர் சவால்..!!

 
1

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. அதனைப் பார்த்துவிட்டு எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல் இயக்குநர் நடாவ் லபிட், "இந்த படம் அருவருக்கத்தக்கது, வெறுப்பு பிரச்சாரம் செய்கிறது" என்றும் பேசியிருந்தார்.

நடாவ் லபிட்டுக்கு பதிலடி கொடுக்கும்படியாக நேற்றே தனது ட்விட்டரில், "உண்மைகள் எப்போதும் ஆபத்தானது அது சில நேரம் மக்களை பொய் சொல்லவும் தூண்டும்" என்று பதிவிட்டார் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி.

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் விவேக். அதில், "இது போன்ற எதிர்வினைகள் எனக்கு ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே பயங்கரவாத அமைப்புகளாலும் நகர்புற நக்சல்களாலும் இந்தியாவைப் பகுதி பகுதியாக பிரிக்க நினைப்பவர்களாலும் இது போன்ற வார்த்தைகளைக் கேட்டிருக்கிறேன்.

ஆனால் இந்திய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மேடையில் இதுபோலப் பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எப்போதுமே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் இவர்கள் யார்? ”

”கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள் 700 பேரின் குடும்பத்தினரை நேர்காணல் செய்த பின்னர் தான் இந்த படத்தை எடுத்தோம்.

காஷ்மீர் ஃபைல்ஸை எதிர்க்கும் நகர்புற நக்சல்கள் மற்றும் நடாவ் லபிட் போன்றோருக்கு சவால் விடுகிறேன். அந்த படத்தில் தவறு இருப்பதை நிரூபித்தால் நான் திரைப்படம் இயக்குவதை விட்டுவிடுகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

From Around the web