ஒருத்தனோட வரலாற்றை அழிக்கணும்னா மொதல்ல அவனோட அடையாளத்தை அழிக்கணும்..!! வெளியான நந்தி வர்மன் படத்தின் டீஸர்..!!
Oct 15, 2022, 08:05 IST
காவல்துறை உங்கள் நண்பன் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் நடிகர் சுரேஷ் ரவி. இவர் தற்போது சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சத்திலான ஒரு படத்தில் நடித்துள்ளார்.
புதுமுக இயக்குனரான பெருமாள் வரதன் இந்த படத்தை இயக்கி வருகிறார். பல்லவ சாம்ராஜ்யத்தின் பிரபலமான பேரரசர்களில் ஒருவரான நந்திவர்மனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த படம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான மர்ம கதையை அவிழ்கிறது எனவும் கூறப்படுகிறது. நடிகர் சுரேஷ் ரவிக்கு ஜோடியாக ஆஷா கவுடா என்பவர் நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி தந்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.