நூல் வெளியீட்டு விழாவில் கண்கலங்கிய இளையராஜா !

 
1

சென்னையில் சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, 'தங்க பதக்கம்' திரைப்படம் வெளியானபோது எனது சொந்த ஊரான போடிநாயக்கனூர் வந்திருந்தார் சிவாஜி. அப்போது அங்குள்ள மக்களை சிவாஜி சந்தித்தபோது நான் மிகவும் சின்ன பையன். 

sivaji

அப்படி பார்த்த சிவாஜி, எனது ஸ்டூடியோவிற்கு வரும்போது ராசா உள்ளே வரலாமா என்று கேட்டார். அந்த நொடி நான் கண்கலங்கிவிட்டேன். சிவாஜியிடம் இருந்து ஒன்று கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அது நேரம் தவறாவை. யார் அந்த நிலவு பாடலில் சிகரெட் குறைந்துக் கொண்டே வரும். ஆனால் ஒரு முறை கூட சிவாஜி சிகரெட் பிடித்ததில்லை.

 நடிகர் சிவாஜிக்கு மரியாதை செய்ய வேண்டும் என முடிவெடுத்து இயக்குனர் எஸ்.பி முத்துராமன் முன்னணி நடிகர்களிடம் பணம் வசூலிக்க முடிவு‌ செய்தார். அப்போது என்னிடம் அந்த விஷயத்தை கூறினார். வெள்ளியில் குதிரை மேல் சிவாஜி அமர்ந்திருப்பது போன்று ஒரு சிலையை கொடுக்க வேண்டும் என்றார். அந்த சிலைக்கான அனைத்து செலவையும் வேறு யாரும் செய்யக்கூடாது என கூறி முழு செலவையும் நானே ஏற்றேன். இதை பெருமையாக சொல்வேனே தவிர தம்பட்டம் அடிக்க சொல்லவில்லை. சிவாஜிக்கு அரசு எந்த மரியாதையும் செய்யவில்லை என்று கூறினார். 

From Around the web