"நான் தற்போது காட்டுப் பசியில் இருக்கிறேன்" - நடிகர் சிம்பு..!!

 
1

‘மாநாடு’ வெற்றியை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை செப் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. 

இந்நிலையில் நடிகர் சிம்பு, சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நான் காட்டு பசியில் இருக்கிறேன். அதனால் திரைப்படங்களின் கதைகளை கவனமாக பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறேன். நிறைய கதைகள் வருகின்றன. ஆனாலும் என்னுடைய காட்டு பசிக்கு தீனிப்போடும் கதைகளை மட்டுமே எதிபார்த்து காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படங்களை கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு இருக்கும் என்று அதிரடியாக பேசியுள்ளார்.

ஆரம்ப கட்டத்தில் என்னிடம் ஒரு வேகம் இருந்தது.. ஆனால், படங்களை எப்படி தேர்வு செய்யணும் என்ற தெளிவு அப்போது எனக்கு இல்ல தற்போது, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படங்களை கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு இருப்பதாக உணர்கிறேன் என பேசினார்.

From Around the web