11 வகை சிறு தானியத்தில் வடிவமைக்கப்பட்ட அஜித், விஜய்யின் உருவம்..!! 

 
1

நடிகர் அஜீத் நடிக்கும் துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு படம்  இன்று தமிழகமெங்கும் வெளியானது. இதனை முன்னிட்டு அஜித், விஜய் ரசிகர்கள் சங்கம் இணைந்து தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின்  மாநில பொதுச் செயலாளர் இட்லி இனியவனிடம் கேட்டு கொண்டதன் பேரில், கம்பு, தினை, சோளம், குதிரை வாலி, கேழ்வரகு, சாமை, வரகு, உள்ளிட்ட 11 வகையான சிறுதானியத்தில் 
5 அடி அகலம்  6 உயரத்தில்  நடிகர் அஜீத் , மற்றும் விஜய் உருவம் வடிவமைத்து பாரத் திரையரங்கில் காட்சி படுத்தப்பட்டுள்ளது

1

தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இட்லி இனியவன் சுமார் 10 மணி நேரமாக ஒன்றிணைந்து 11 வகையான சிறுதானியத்தில் நடிகர் அஜீத் மற்றும் விஜய் உருவத்தை வரைந்துள்ளார். நம்மாழ்வாரின் நினைவாக சிறுதானிய உணவுகளை வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ரசிகர்களை கொண்டாடும் வகையிலும் தல தளபதி உருவம் வரையப்பட்டிருப்பதை அனைவரும் கண்டு ரசித்து செல்கின்றனர்.

From Around the web