சீதா ராமம் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்..? 

 
1

துல்கர் சல்மான் மற்றும் மிருனாள் தாகூர் நடிப்பில் உருவாகியுள்ள சீதா ராமம் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்வப்னா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹனு ராக்வபுடி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இந்த படத்தில் பாலிவுட் நடிகை மிருனாள் தாகூர் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் லெப்டினன்ட் ராம் என்ற கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

1

பிரைம் வீடியோ இன்று மிகப்பெரிய சாதனை புரிந்த சீதா ராமம் தெலுங்குத் திரைப்படத்தின்  உலகளாவிய டிஜிட்டல் பிரீமியர் வெளியீட்டை அறிவித்தது.சீதாவிடமிருந்து கடிதத்தைப் பெற்ற பிறகு தனது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை சந்தித்த  ஒரு அனாதை சிப்பாயான லெப்டினன்ட் ராமின் காதல் கதையின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கிறது. செப்டம்பர் 9, 2022 முதல் இந்தியா மற்றும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் கண்ணுக்கு விருந்தாக அமையும் இந்த அழகான கதையின் தெலுங்குப் பதிப்பை   மலையாளம் மற்றும் தமிழ் மொழியாக்க சேவையுடன்   ஸ்ட்ரீம் செய்யலாம்.


 

From Around the web