இந்திய அணியின் துணை கேப்டனுக்கு பாலிவுட் நடிகைக்கும் ஜனவரியில் டும்டும்டும்..!! 

 
1

கே.எல்.ராகுலும் நடிகை அதியா ஷெட்டியும் வரும் 2023 ஜனவரியில் தங்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நீண்ட காலமாக இந்த ஜோடி காதலித்து வருகின்றனர். இருவரும் அடிக்கடி ஒன்றாக ஊர் சுற்றினாலும், நீண்ட நாட்களாக திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தனர். இந்நிலையில், இவர்களது திருமண அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த அனைத்து ரசிகர்களுக்கும் தற்போது ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.

ஜனவரி மாதம் கே.எல். ராகுலும் அதியாவும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்ய உள்ளனர். இந்த ஜோடி கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் வீட்டில் திருமணம் செய்துகொள்வார்கள். மேலும் மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பை தடபுடலாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக 2021 ஆம் ஆண்டு அதியா ஷெட்டியின் சகோதரர் அஹான் ஷெட்டியின் முதல் படமான தடப் படத்தின் திரையிடலில் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கலந்து கொண்டபோது, ​​அதியாவும் ராகுலும் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

From Around the web