சென்னையில் உள்ள பிரபல ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை கைப்பற்றியது ஐநாக்ஸ்..!!

 
1

சென்னை வேளச்சேரியில் உள்ள வணிக மாலில் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. ஒரு ஐமேக்ஸ் மற்றும் 10 சாதாரண திரை என மொத்தம் 11 திரையரங்குகளுடன் ஜாஸ் சினிமாஸ் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது.

சென்னையின் முக்கிய திரையரங்கங்களில் ஒன்றாக ரசிகர்களால் இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜாஸ் சினிமா திரையரங்கை ஐநாக்ஸ் நிர்வாகம் கைப்பற்றியுள்ளது. 

சென்னையில் ஏற்கனவே சிட்டி சென்டர், விருகம்பாக்கம் சந்திரா மால் மற்றும் மெரினா மால் ஆகிய இடங்களில் ஐநாக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இது தவிர கோவை, மதுரை மற்றும் சேலத்திலும் ஐநாக்ஸ் நிறுவனத்தின் தியேட்டர்கள் இயங்கி வரும் நிலையில், மேலும் ஒரு யூனிட்டை ஐநாக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது 

From Around the web