பிச்சைக்காரியாகவோ விபசாரியாகவோ நடிக்க தயார் - பிரபல நடிகை பேட்டி..!!
Jul 26, 2022, 08:05 IST
பார்த்திபன் இயக்கத்தில் 'இரவின் நிழல்' படத்தில் ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சின்னத்திரை நடிகை ரேகா நாயர். அரை நிர்வாணத்துடன் அவர் நடித்த காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன. இதுகுறித்து பேசிய அவர், ''ஒரு கலையை கலையாக தான் பார்க்க வேண்டும். நான் 'இரவின் நிழல்' படத்தில் அரை நிர்வாணமாக நடித்ததால் எந்த அளவுக்கு பாராட்டுகள் கிடைத்ததோ, அதே அளவுக்கு விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? என பலரும் விமர்சிக்கிறார்கள். எனக்கு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசையில்லை. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன். ஒரு பிச்சைக்காரியாகவோ, விபசாரியாகவோ எதுவாக இருந்தாலும் தயங்காமல் நடிப்பேன். மேலும் கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக கூட நடிக்க தயார்'' என்றார்.
 - cini express.jpg)