தேவசேனாவை கரம் பிடிக்கிறாரா பாகுபலி பிரபாஸ்..?

 
1

தென்னிந்தியாவில் பிரபல நட்சத்திரங்களாக இருப்பவர்கள் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா. இவர்கள் இருவரும் இணைந்து பில்லா, மிர்சி, பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். 

நடிகை அனுஷ்காவும், தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும்ஏற்கனவே பலமுறை கிசுகிசுக்கள் வந்து அடங்கியது. இந்நிலையில் சமீபத்தில் மரணம் அடைந்த பிரபாசின் பெரியப்பாவும், தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ராஜு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது பிரபாசுடன் நேரில் சென்று அனுஷ்கா பார்த்த புகைப்படம் வெளியானது.

1

அனுஷ்கா, பிரபாசை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கிருஷ்ணம் ராஜு விரும்பியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அனுஷ்காவும், பிரபாசும் காதலிப்பது உறுதி என்றும், விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் வலைத்தளத்தில் மீண்டும் தகவல்கள் பரவி உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாம். திருமணத்திற்கு பிறகு இருவரும் அமெரிக்காவில் செட்டிலாக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

From Around the web