பிரபல நடிகையின் அண்ணனை காதலிக்கும் இலியானா ?

 
1

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த இலியானா பாலிவுட்டில் செட்டிலாகிவிட்டார். பாலிவுட்டில் அவரால் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் அவர் வாழ்வில் மீண்டும் காதல் வந்திருக்கிறது என்று பேசப்படுகிறது.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தன் 39வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் சேர்ந்து மாலத்தீவுகளில் கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தில் இலியானாவும் கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இலியானா இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார். 

கத்ரீனா கைஃபின் அண்ணன் செபாஸ்டியனை தான் இலியானா காதலிக்கிறார். அதனால் கத்ரீனா குடும்பத்தாருடன் நேரம் செலவிட மாலத்தீவுகளுக்கு சென்றிருக்கிறார் என்று பேசப்படுகிறது. 

முன்னதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ நீபோனை காதலித்து வந்தார் இலியானா. இருவருக்கும் ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதாக பேசப்பட்டது. இதையடுத்து அவர்கள் பிரிந்துவிட்டார்கள். அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. 

1

From Around the web