ஓடிடியில் கேஜிஎப் 2 இத்தனை கோடிக்கு விற்பனையா.!?

 
1

கேஜிஎப் 2 திரைப்படம் கடந்த மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது . பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் யாஷ் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். படமும் விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ஆயிரம் கோடி வசூலை தாண்டி இன்னும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது .அடுத்தாக படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில், கேஜிஎப் 2 எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த வேளையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், படத்திற்கான ஓடிடி உரிமத்தை அமேசான் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் 300 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

From Around the web