ஷாருக்கானுக்கு வில்லனாகும் மக்கள் செல்வன் ?

 
1

அட்லீ தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. முகம் முழுவதும் பேண்டேஜ் சுற்றி இருப்பது போல் ஷாருக்கான் தோற்றமளித்தார்.இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

1

இந்நிலையில் ஜவான் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவர தொடங்கியது. தற்போது இது கிட்டத்தட்ட உறுதியான செய்தி என்று கூறப்படுகிறது.விஜய் சேதுபதி கதாபாத்திரம் ஜவான் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் தன் கைவசம் சிறிது படங்கள் மட்டுமே வைத்திருக்கும் விஜய் சேதுபதி பாலிவுட் மற்றும் தெலுங்கில் அதிக படங்களின் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து இருந்த விக்ரம் படம் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்துள்ளது.

From Around the web