மீண்டும் இணைகிறதா மாஸ்டர் கூட்டணி..?
Apr 28, 2022, 06:05 IST

நடிகர் விஜய்யின் 67-வது படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் 2வது முறையாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.