தமிழின் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த படமாக உருவாகிறதா நட்சத்திரம் நகர்கிறது?

 
1

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து வழங்கும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் மற்றும் “டான்சிங் ரோஸ்” ஷபீர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் வகையில் அந்த கதாபாத்திரங்கள் நட்சத்திரம் நகர்வது என்ன மாதிரியான திரைப்படம் என பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட்டுள்ள அந்த போஸ்டர் தன் பால் ஈர்ப்பாளர்களின் அடையாள கொடியின் வண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த வாழ்க்கையை காதல் மூலம் பதிவு செய்யும் படைப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் உறுதியாகும் பட்சத்தில் தமிழின் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சினிமா என்ற பெருமையை இப்படம் பெறும் எனக் கூறப்படுகிறது.

From Around the web