தோனி படத்தில் நயன்தாராவா.? இந்த காம்போ புதுசா இருக்கே.!

 
1

அட்லியின் ‘லயன்’ எனற படத்தில் பிஸியாக இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அதில் அவர் ஷாருக்கானுடன் நடித்து வருகிறார். இதற்கிடையில், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் முதல் தயாரிப்பு முயற்சியாக இருக்கும் பெண்களை மையமாகக் கொண்ட படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோலிவுட் வட்டாரங்காளில் பேசப்படுகிடுறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் இன்னும் சில சீசன்களில் மட்டுமே விளையாட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தோனி திரைப்படத் தயாரிப்பில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த முயற்சிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூட்டாளி ஒருவரை நியமித்துள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில்,நயன்தாராவுடன் ஒரு படம் லாபம் தரும் என்று எதிர்பார்த்து அவரிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார்களாம். இதற்கிடையில், நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.இதனால், தோனி தயாரிப்பு திட்டம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web