ஒடிடியில் வெளியாகிறதா பார்த்திபனின் இரவின் நிழல்..அவரே சொன்ன பதில்..!! 

 
1

இயக்குனர் பார்த்திபன் தனது முதல் படமான 'புதியபாதை'  முதல் 'ஒத்த செருப்பு' வரை பல வித்தியாசமான, தனித்துவமான படங்களை எழுதி இயக்கி தனக்கென தனி பாதையை உருவாக்கி, அதில் வெற்றிகரமாக பயணிக்கிறார்.  ஒத்த செருப்பு 2019-ம் ஆண்டிற்கான தேசிய விருது உட்பட  பல உலக விருதுகளை பெற்றது. 

தனது முத்தைய படங்களில் உலக சினிமாவை நோக்கி சென்ற பார்த்திபன், தற்போது உலக சினிமாவை தன்பக்கம் திருப்பியிருக்கிறார். உலகின் முதல் NON - LINEAR சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழலை வெற்றிகரமாக வெளியிட்டார். படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது. 

1

இந்நிலையில் இப்படம் எப்போது ஒடிடியில் வரும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர்..    

இது குறித்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் ட்வீட் செய்துள்ளார்."காலை வணக்கம்!
அமேசானில் இன்றோ நாளையோ ‘இரவின் நிழல்’ வந்தே விடும் ! அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் … இருக்கிறோம். பார்ப்போம்! 
நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி!!!  

From Around the web