பாலிவுட் பக்கம் செல்கிறாரா தளபதி விஜய் ..? டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் முக்கிய அறிவிப்பு..!! 

 
1

இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்க்கஸ்’. இந்தப் படம் வில்லியம் ஷேக்ஸ்பியரின் தி காமெடி ஆஃப் எரர்ஸ் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரனவீர் சிங் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ரன்வீர் சிங்குடன் பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஜானி லீவர், சஞ்சய் மிஸ்ரா மற்றும் வருண் ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  நகைச்சுவை கலந்த குடும்பப்பாங்கான படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இந்தப் படத்தில் தீபிகா படுகோன் ஒரேயொரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

Cirkus

இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் ரன்வீர் சிங், ரோஹித் ஷெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ரன்வீர் சிங், ஷாரூக் கான் பாலிவுட் திரையுலகின் ராஜாவாகப் பல ஆண்டுகள் திகழ்கிறார். அவரால்தான் நம்மைப் போன்றவர்கள் எல்லாம் நடிப்புத் தொழிலுக்கு வந்தோம். பாலிவுட் திரையுலகத்துக்கு மிக அதிகமான பங்களிப்பை அளித்துள்ள ஷாரூக் கான்தான் நமது வழிகாட்டி. அவர் செய்ததில் துளியூண்டு அளவுக்கு என்னால் செய்ய முடியுமானால் அதுவே பெரிய விஷயம் என்றார்.

இந்த விழாவில் பேசிய இயக்குநர் ரோஹித் ஷெட்டி, ரன்வீர் சிங் மற்றும் விஜய்யை ஒரு மல்டிஸ்டாரரில் இயக்க போவதாக கூறினார். மேலும் ரஜினிகாந்த், அஜித் மற்றும் அனைத்து தென்னக நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார்.


 

From Around the web