தளபதி விஜயின் மகன் குறும்படம் இயக்குகிறாரா?

 
1
1992-ல் வெளியான ‘நாளை தீர்ப்பு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் தளபதி விஜய். 

அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல லட்சம் ரசிகர்கள் கொண்ட மாஸ் ஹீரோ என்ற இடத்தில் உள்ளார் விஜய்.

Sanjay

சமீபத்தில் வெளிவந்த ‘வாரிசு’ திரைப்படம் உலகில் அனைத்து இடங்களிலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது. இதுவரை ரூ. 278.5 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

இவரது மகள் திவ்யா ஏற்கனவே ‘தெறி’ படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார். மகன் சஞ்சய்யும் இவருடன் ‘வேட்டைக்காரன்’ உள்பட சில  படங்களில் பாடல் காட்சிகளில் நடித்து திரைக்கு அறிமுகமானவர் தான். தற்போது கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா எடுப்பது குறித்து படித்து வருகிறார்.


 


இந்த நிலையில் சஞ்சய் அவரது நண்பர்களுடன் ஒரு குறும்படம் எடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மஞ்சள் நிற உடை அணிந்திருக்கும் அவர், படத்தை இயக்குகிறார். இதற்கு முன்னரே 2020-ல் விஜய்சேதுபதியை வைத்து திரைப்படம் எடுப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் அதை பற்றின தகவல்கள் அதற்கு பிறகு வெளிவரவில்லை.

 

From Around the web