பொன்னியின் செல்வன் ட்ரைலரை வெளியிடுகிறாரா தமிழக முதல்வர் ?

 
1

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. 

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "பொன்னியின் செல்வன் -1" திரைப்பட விழா வருகிற செப்டம்பர் 6-ந் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாகவும் அதில் படத்தின் டிரைலரை வெளியிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web