நடிகை ஐஸ்வர்யாவுக்கு இப்படி ஒரு நிலைமையா..?

 
1

தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பல வேடங்களில் நடித்துள்ளவர் நடிகை லட்சுமி. இவரது மகள் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். இவரும் பல சினிமா படங்களில் நடித்துள்ளார். 

90 களில் சில திரைப்படங்களில் முன்னணி இடத்தைப் பிடித்த ஐஸ்வர்யா, சமீபகால திரைப்பட மாற்று வழிகள் இல்லாததால் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக தற்பொழுது நடித்து வருகிறார் . உள்ளேயும் வெளியேயும் ஹவுஸ்ஃபுல், நதி, ஜனா, வேல், குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், அவர் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நான் இப்போது வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மோசமான நிலையில் இருக்கிறேன், வேலையில்லாததால் வருமானத்திற்காக எதையாவது செய்து ஆகவேண்டும் என்ற கட்டாயத்தால், தற்போது சோப்பு விற்பனை செய்து வருகிறேன். இதில் ஏதோ வருமானம் கிடைக்கிறது என்றார்.

மேலும் நான் சோப்பு விற்பதை நினைத்து வருத்தப்படவில்லை. எந்த வேலையாக இருந்தாலும் மன நிறைவுடன் செய்தால் அதில் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று அந்த பேட்டியில் ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

From Around the web