நடிகை ஸ்ருதிஹாசனா இது..?  முக வீக்கத்துடன் நடிகை வெளியிட்ட புகைப்படம்..!!

 
1

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். தமிழில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார்

தெலுங்கில் பிசியான நடிகையாக இருக்கும் அவர், சலார், வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையே தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் மும்பையில் வசித்து வரும் ஸ்ருதிஹாசன், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன், அதிர்ச்சி தரும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் துளிக்கூட மேக்கப் இல்லாமல், உதடு மற்றும் முக வீக்கத்துடன் இருக்கிறார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காய்ச்சல் மற்றும் சைனஸ் பிரச்சனையால் முகம் வீங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

1

From Around the web