இது நியாயமா ராஷ்மிகா...பாலிவுட் வாய்ப்புக்காக உங்களை வாழ வைத்த தென்னிந்திய சினிமாவை குறை கூறலாமா ?

 
1

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவர்  நடிகை ராஷ்மிகா மந்தனா.அதன்பிறகு தெலுங்கு, இந்தி, தமிழ்,கன்னடம் என 4 மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள வாரிசு படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா.இதனைத் தொடர்ந்து மிஷன் மஜ்னு என்ற இந்தி படத்திலும் அவர் லீடிங் ரோலில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராஷ்மிகா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த விழாவில் பேசிய ராஷ்மிகா, தென்னிந்திய திரைப்படங்களில் மசாலா சாங்ஸ், ஐட்டம் பாடல்கள் போன்ற டான்ஸ் மோடில் தான் பாடல்கள் வருகின்றன எனக் கூறியுள்ளார். மேலும், பாலிவுட்டில் தான் மெலடியான ரொமாண்டிக் பாடல்கள் வருகின்றன. மிஷன் மஜ்னு படத்தில் அப்படி நான் எதிர்பார்த்த ரொமாண்டிக் சாங் உள்ளது. அதனை கேட்க நான் ஆவலாக உள்ளேன், நீங்களும் கண்டிப்பாக கேட்டுப் பாருங்கள் என பேசினார். ராஷ்மிகாவின் இந்த கருத்து சர்ச்சையாகியுள்ளது.

1

தென்னிந்திய திரைப்பட பாடல்களை மட்டம் தட்டிவிட்டு, பாலிவுட் பாடல்களுக்கு ஜால்ரா அடித்த ராஷ்மிகாவை நெட்டிசன்கள் விமரசனம் செய்து வருகின்றனர். இவர் செல்லும் இடமெல்லாம் நேரத்துக்கு தகுந்தாற்போல் பேசுவதாகவும், கொஞ்சம் கூட பொறுப்புணர்வே இல்லையென்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும், ராஷ்மிகாவின் ஆரம்ப காலங்களில் கன்னடம், தெலுங்கு மொழிகளில் அவருக்கு சூப்பரான மெலடி பாடல்கள் வெளியானதாகவும், ஆனால், அதையெல்லாம் நினைவில் இல்லாமல் பேசுவதாகவும் விளாசியுள்ளனர். 


 

From Around the web