இந்த காமெடி நடிகருக்கா இந்த நிலைமை..? இரண்டு கிட்னியும் செயலிழந்து போச்சு... மருத்துவமனையில் கதறும் போண்டா மணி.. 

 
1

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவர் போண்டா மணி. இவர் வடிவேலுமற்றும் விவேக் உடன் பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார். 

இலங்கையைச் சேர்ந்த இவரது இயற்பெயர் கேதீஸ்வரன் என்பதாகும். சினிமாவில் நுழைய முயற்சி செய்த காலங்களில் போண்டா, தண்ணீர் சாப்பிட்டு கொண்டு வாய்ப்பு தேடுவாராம். எனவே இயக்குனர் வி. சேகர், அவருக்கு போண்டா மணி என்று பெயர் வைத்துவிட்டார். இதுவரை 270-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். வடிவேலுவுடன் இவர் நடிக்கும் காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படத்தில் வடிவேலுவுடன் மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்றார்.

இந்நிலையில் போண்டா மணிக்கு இரண்டு கிட்னி செயலிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் சென்னை ஓமந்தூரர அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கிட்னி தானம் கொடுக்க ஆள் இல்லாததால் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. அதனால் யாராவது உதவி செய்யவேண்டும் என்று கோரிக்கை ஒன்றையும் போண்டாமணி ரசிகர்களுக்கு விடுத்துள்ளார். 

From Around the web