கமல் தயாரிக்கும் படத்தில் உதயநிதிக்கு பதில் நடிக்கப்போகும் நடிகர் இவரா?

 
1

மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தில் நடித்து வந்தார் உதயநிதி ஸ்டாலின். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இதையடுத்து கமலின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியல்வாதி மாறி கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருந்த படத்திலிருந்து உதயநிதி விலகிவிட்டதால் படத்தில் கதாநாயகனாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது‌. 

1

இந்நிலையில் உதயநிதிக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 'கிடாரி' படத்தை இயக்கிய பிரசாந்த் முருகேசன் இப்படத்தை இயக்கவுள்ளார். வரும் ஜனவரி 23-ஆம் தேதி  தொடங்கும் இப்படத்தின் படபிடிப்பு இரண்டு அல்லது மூன்று மாதங்களுள் நிறைவுபெறும்  என்று தகவல் கசிந்துள்ளது

From Around the web