'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புதிய முல்லை இவரா ?    

 
1

விஜய் டிவியில்  நீண்ட நாட்களாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’.விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், குமரன், வெங்கட், காவியா, ஹேமா, சரவண விக்ரம், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் கதிர் மற்றும் முல்லை ஜோடிக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும். குறிப்பாக முல்லை கதாபாத்திரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களை ஈர்த்ததில் முக்கிய காரணமாக இருந்தவர்கள் முல்லை – கதிர் ஜோடிதான். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் முல்லையாக விஜே சித்ரா, சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.விஜே சித்ராவின் மறைவுக்கு பிறகு, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடிக்கத் தொடங்கினார்.

சமீபத்தில் இவர் சீரியலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் புதிய முல்லை கதாபாத்திரத்தில் அபிநயா என்பவர் நடிக்கவுள்ளாராம். இவரை விரைவில் சீரியலில் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் இதற்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ரா தோழியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் பார்ப்பதற்கு கூட ஒரு ஜாடையில் சித்ரா போலவே இருக்கிறார். உண்மையில் இவர் தான் புதிய முல்லையாக நடிக்க உள்ளாரா? அல்லது வேறு யாராவது நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

1

From Around the web