பிக்பாஸ் வீட்டில் இருந்து தனலட்சுமி வெளியேற்றப்பட்டதற்கான காரணம் இது தானாம் ..?
 

 
1

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சி 10 வாரத்தை கடந்து வெற்றிக்கரமாக செல்கிறது. அதனால் நிகழ்ச்சி மிகவும் ஆர்வமாக கவனித்து வருகின்றனர் ரசிகர்கள். 

bigg boss dhanalakshmi

ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் தனலட்சுமி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் வலுவான போட்டியாளராக தனலட்சுமி இருந்து வந்தார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு இருந்து வந்தது. இருந்தபோதிலும் தனலட்சுமி அதிரடியாக வெளியேற்றப்பட்டார். தனலட்சுமி வெளியேற்றப்பட்ட குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் அதிக கன்டென்ட் கொடுத்தவரே தனலட்சுமிதான். அவரை எதற்காக பிக்பாஸ் நீக்கினார் என புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில் தனலட்சுமி வெளியேற்றப்பட்டதற்கு ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால்  அடுத்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வரும் டாஸ்க் உள்ளது. அந்த டாஸ்க்கில் எப்படியும் தனலட்சுமி தனது அம்மா குறித்துதான் பேசுவார். ஏற்கனவே பல யூடியூப் சேனல்களில் தனது அம்மா குறித்து கூறினார். அதனால் தற்போது விஷயத்தை கூறினால் சுவாரஸ்சியம் இருக்காது என்பதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

From Around the web