நெஞ்சுக்கு நீதி படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுவா..?

 
1

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. தீண்டாமை குறித்து வெளிவந்த இந்த படம் அணைத்து தரப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் எனும் படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி . இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

மாமன்னன் படத்திற்கு முன்னரே உதயநிதி, இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் , இதுவரை இப்படத்தின் தலைப்பு குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை .

இந்நிலையில், இப்படத்திற்கு ‘கழக தலைவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web