உங்களுக்குள்ள 2 இதயம் துடிக்கிறதா என்னைக்காவது பீல் பண்ணி இருக்கீங்களா.. அசத்தலாக வெளியான யசோதா ட்ரைலர்

சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவைப் பிரிவதாகக சமீபத்தில் அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. எனவே சமந்தா அடுத்து சில காலம் கழித்து தான் சினிமாவில் மீண்டும் செலுத்துவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது சமந்தா நடிப்பில் உருவாக இருக்கும் படம் யசோதா.ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இணைந்து இயக்கி வருகின்றனர். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், மலையாள நடிகர் உன்னி முகுந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மணி ஷர்மா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் அறிவியல் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கிறது. இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படம் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படக்குழுவினருடன் சமந்தா மோதலில் ஈடுபட்டு வந்ததால் படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என தகவல் கசிந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் நவம்பர் மாதம் 11-ஆம் தேதி வெளியாகிறது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்த படம் வாடகைத்தாய் விவகாரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் வாடகைத் தாய் விவகாரம் சர்ச்சையான நிலையில், சரியான நேரத்தில் இந்த படமும் வெளியாக உள்ளது.
இந்நிலையில், யசோதா படத்தின் தமிழ் ட்ரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டார்.
Hearty wishes to @Samanthaprabhu2 and team #Yashoda all the best! https://t.co/4ja9dvnSix@SrideviMovieOff @harishankaroffl@hareeshnarayan @SakthiFilmFctry
— Suriya Sivakumar (@Suriya_offl) October 27, 2022