அதுகுல்லையா..!! விரைவில் ஒடிடியில் வெளியாகிறது கோப்ரா.. விக்ரம் ரசிகர்கள் அதிர்ச்சி..!!  

 
1

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்  நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா.   இந்தப் படத்தில் கேஜிஎப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்தப்படம் மூலம் நடிகராக களமிறங்குகிறார்.  மேலும் இப்படத்தில் மியா, மிருணாளினி,  கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ சங்கர், ரோஷன் உள்ளிட்ட பலர்  முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். . இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

 இந்த படத்தில் விக்ரம் பல கேரக்டரில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார். இந்த படத்தின் முதல் பாதி பல ட்விஸ்ட்டுகளுடன் செல்கிறது. ஆனால் இரண்டாம் ரசிகர்கள் எதிர்பார்த்த எந்த சுவாரஸ்சியமும் இல்லை. அதனால் இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இப்படம் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 

இந்நிலையில் கோப்ரா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோப்ரா திரைப்படம் வரும் 23 -ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

1

From Around the web