என் மனைவி தான் தினமும் என்னை மன ரீதியாக துன்புறுத்தினார் - நடிகர் அர்ணவ் புலம்பல் ..!!

 
1

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த நடிகை திவ்யா, ‘கேளடி கண்மணி’ தொடரின் மூலம் அறிமுகமானார். தற்போது ‘செவ்வந்தி’ தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் ‘செல்லம்மா’ தொடரில் நடித்தபோது உடன் நடித்த நடிகர் அர்ணவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகை திவ்யா, தனது கணவர் அரணவ், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் எந்த நேரத்திலும் தனது கரு கலையலாம் எனவும் கூறி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தனது கணவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2 வீடியோக்களையும் வெளியிட்டார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

Dhivya

இதற்கிடையில் அர்ணவ், “என் மனைவி அவள் கருவை கலைக்க நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிடுகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணமானது எனக்கு தெரியும். ஆனால் விவாகரத்து செய்து விட்டதாக என்னிடம் பொய் சொல்லி என்னை திருமணம் செய்து கொண்டார்” என்று ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அது தொடர்பாக போரூர் அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் இரவு அரணவ்விடம் 4 மணிநேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று நிருபர்களிடம் நடிகர் அரணவ் கூறியதாவது, கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகி கணவன், மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘செல்லம்மா’ என்ற புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமானேன். அதில் எனக்கு கதாநாயகியாக சின்னத்திரை நடிகை ஒருவர் நடித்தார். நாங்கள் இருவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திவ்யாவுக்கு எங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன் பிறகு தான் அவர், தன்னை திருமணம் செய்தே ஆக வேண்டும் என வற்புறுத்தினார்.

திவ்யாவின் விருப்பத்துக்கு ஏற்ப பெற்றோருக்கு தெரியாமல் இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எனது தந்தை இஸ்லாமிய மதத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடக்கூடாது என கூறினேன். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.

Arnav-dhivya

ஆனால் எங்கள் மீது இருந்த சந்தேகம் அதிகரித்ததால் சில நேரங்களில் படப்பிடிப்பு தளத்துக்கே வந்து திவ்யா தகராறு செய்தார். இதற்காக அவரையும், படபிடிப்பில் உள்ள மற்றவர்களையும் சமாதானம் செய்து, மன்னிப்பு கேட்டு உள்ளேன். திவ்யா அடிக்கடி வீட்டில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தாலியை கழற்றி வைத்து, கடிதம் எழுதி வைப்பது, கைகளை அறுத்து கொள்வது என பல விதங்களில் என்னை மிரட்டினார்.

அத்துடன் எனது பேச்சை மீறி இந்து முறைப்படி நடந்த திருமண புகைப்படங்களை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதனை நீக்குமாறு கூறியும் அவர் கேட்கவில்லை. மேலும் எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக கூறி அவரது சமூக வலைதள பக்கத்தில் தகவல் வெளியிட்டு இருந்தார். திருமணத்தின்போது இருவருக்கும் நெற்றியில் பொட்டு, முகத்தில் சந்தனம் தடவியது போன்ற புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதால் எனது வீட்டில் பிரச்சினை வெடித்தது.

இதனால் எங்களுக்குள் பிரச்சினை அதிகமானது. மேலும் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார். அது தெரிந்தும் திவ்யாவுடன் சேர்ந்து வாழ தொடங்கினேன். தினமும் என்னை மன ரீதியாக துன்புறுத்தினார். இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நடிகை திவ்யா உடன் நான் மீண்டும் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என்று கூறினார்.

From Around the web