போட்றா வெடிய..!! இன்று வெளியாகிறது வாரிசு படத்தின் ட்ரைலர் - அதிகாரபூர்வ அறிவிப்பு..!! 

 
1

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் படம் வாரிசு. மாஸ் படங்களாக நடித்து வந்த விஜய் திடீரென குடும்ப செண்டிமெண்ட் கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது 

தற்போது படம் முடிந்து பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ் ராஷ், ஷாம், குஷ்பூ, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இன்னும் படம் ரிலீஸ் ஆக பத்து நாட்களை விட குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் தற்போது வரை வாரிசு ட்ரைலர் வெளியாகவில்லை.

1

இப்படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் இப்படம் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 

From Around the web