'ராஜாராணி' சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்..!! 

 
1

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் நடிகர் அருள்நிதி. அவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் நல்ல வரவேற்பு பெறும் படங்களாகவே அமைகின்றன.  வம்சம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான அருள்நிதி, தொடர்ந்து மௌனகுரு, தகராறு, டீமாண்டி காலனி,ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே 13, தேஜாவு ,டைரி  போன்ற பல தரமான படங்களைக் கொடுத்து திரையிலகில் கவனம் பெற்றவர்.

அந்த வகையில் அவர் நடிப்பில் ஹாரர் த்ரில்லரில் வெளியான 'டிமான்டி காலனி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 

1

இந்த படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளனர். சி.எஸ்.சாம் இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளார். 

இந்நிலையில் இப்படத்தில் விஜே அர்ச்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் அருள்நிதியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ராஜாராணி' சீரியலின் மூலம் பிரபலமானவர் விஜே அர்ச்சனா என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web