ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக வெளியான 'ஜெயிலர்' தீம்... ரசிகர்கள் கொண்டாட்டம்..!! 

 
1

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’படத்தில் நடிக்கிறார்.இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவ ராஜ்மோகன், யோகிபாபு, வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘படையப்பா’ படத்திற்கு பிறகு ரஜினி, ரம்யா கிருஷ்ணன் கூட்டணி இணைந்துள்ள படம் ஜெயிலர். படையப்பாவில் ரஜினிக்கு மிரட்டல் வில்லியாக நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். அந்தப் படத்தில் அவரது நடிப்பு காலத்திற்கும் நின்று பேசும். வில்லனாக அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிக எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு ஜெயில் செட்டில் தொடங்கியது.

இந்நிலையில் ஜெயிலர் இபடத்தின் தீம் மியூசிக் வெளியாகியுள்ளது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி படக்குழு வெளியிட்டுள்ள இந்த தீம் மியூசிக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 


 

From Around the web