"ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா"... காசேதான் கடவுளடா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

1972-ம் ஆண்டு நடிகர் முத்துராமன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'காசேதான் கடவுளடா'. இந்த படம் தற்போது புது டிரெண்டுக்கு ஏற்றாற்போல் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 'ஜெயம்கொண்டான்', 'கண்டேன் காதலை' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார். ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனம் மற்றும் எம்கேஆர்பி புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
இந்த படத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த்தும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் முத்துராமன் கேரக்டரில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் கேரக்டரில் யோகி பாபுவும், மனோரமா கேரக்டரில் நடிகை ஊர்வசியும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 'காசேதான் கடவுளடா' திரைப்படம் அக்டோபர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.