பொன்னியின் செல்வன் வெற்றி விழாவில் ஜெயம் ரவி பேச்சு..!! 

 
1

கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் படைப்பை அடிப்படையாக கொண்டு இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி இதன் முதல் பாகம் வெளியாகியது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியான இத்திரைப்படம், தொடக்கம் முதலே பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. படம் வெளியாகி 12 நாட்களில் உலகளவில் ரூ.450 கோடி வசூலித்தாக படக்குழு அறிவித்தது.

PS

பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக மொத்தம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், முதல் பாகம் மட்டுமே உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்திய உள்ளதால், பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பார்த்திபன் உள்ளிட்டோர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். 

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது, "இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்துவிட்டு ஒரு மனிதர் மிக அமைதியாக அமர்ந்திருக்கிறார். அவரை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். இயக்குனர் பாலச்சந்தர் தற்போது நம்மிடையே இல்லாமல் போனாலும், அவரைப் பற்றி நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம். இப்படி ஒரு மேதை நம்முடன் இருக்கும் போது, அவரை நாம் சந்தோஷப்படுத்த வேண்டும். 

PS

அவர் 40 ஆண்டுகளாக நம்மை அவரது படங்கள் மூலம் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். அது என்ன என்று தெரியவில்லை. இந்த படைப்பை உருவாகியதற்காக அனைவரது சார்பிலும் இயக்குனர் மணிரத்னத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்தார்.

From Around the web