'ஜீவி 2' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

 
1

கடந்த 2019-ஆம் ஆண்டு வெற்றி நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான ‘ஜீவி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது ஜீவி படத்தின் இரண்டாம் உருவாகி வருகிறது. இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத் இயக்கி வருகிறார். இப்படத்தில் வெற்றிக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரண், மைம்  கோபி, ரோகினி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். 

இந்நிலையில் தற்போது ஜீவி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.ஜீவி 2 திரைப்படம் நேரடியாக ஆஹா ஓடிடி-யில் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி இந்தப் படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

From Around the web