தளபதி விஜய்க்கு வில்லனாகும் கே.ஜி.எஃப் அதீரா..!! 

 
1
தளபதி வம்சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், ஷாம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே மாஸ்டர் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. 67-வது படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்திடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்கும் கே.ஜி.எப் 2 படத்தில் சஞ்சய்தத் கொடூர வில்லனாக மிரட்டி இருந்தார். அவரது நடிப்பு படத்தின் வெற்றிக்கு பெரிய பலமாக அமைந்தது.விஜய்யின் 67-வது படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் சஞ்சய்தத்தை வில்லனாக நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

From Around the web