தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகுது கே.ஜி.எப் பகுதி 1 ..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!  

 
1

2014 ம் ஆண்டில் கன்னடத்தில் வெளி வந்த உக்ரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இரண்டாவது படம்தான் கேஜிஎப். இடைவேளை வரை கதை மும்பையிலும், இடைவேளைக்குப் பின் கேஜிஎப்-லும் நகர்கிறது. ஆரம்பத்தில் ஒரு தாதாவின் கதையாக நாம் ஏற்கெனவே பார்த்துப் பழகிய மும்பை பின்னணியில் நகர்ந்தாலும், கேஜிஎப்-ல் நடக்கும் கதை இதுவரை நாம் எந்த ஒரு சினிமாவிலும் பார்க்காத ஒன்று. அதற்காக மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். அப்படிப்பட்ட படத்தை பார்த்தவர்களுக்கு பார்க்காதவர்களுக்கும் அதை பார்க்க மீண்டும் ஒரு வாய்ப்பு. 

விஜய்யின் பீஸ்ட், யாஷ் நடித்துள்ள கே.ஜி.எப் -2 இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளது. ஆனால் விஜய்யின் பீஸ்ட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என தகவல் வெளியாகி வண்ணம் உள்ளது.இப்போது ரசிகர்கள் கேஜி எவ்- 2 படத்தை தான் அதிகம் கொண்டாடி வருகிறார்கள், நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இப்படத்தின் 2ம் பாகத்தை மக்கள் திரையரங்கில் கொண்டாடி வர முதல் பாகத்தை பார்க்காதவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. அதாவது வரும் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு கேஜி எவ் முதல் பாகம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

From Around the web