காஜல் அகர்வாலின் நெகிழ்ச்சி பதிவு..!!

 
1

நடிகை காஜல் அகர்வால் தனது மகன் நீல் கிச்சுலுவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, அதோடு மிகவும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “என் வாழ்க்கையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்ட இந்த ஆறு மாதங்கள் எப்படி இவ்வளவு வேகமாக போனது என்றே எனக்குத் தெரியவில்லை. பயந்து கொண்டிருந்த இளம் பெண்ணாக நான் இருந்த காலத்தில் இருந்து, அம்மாவாக மாறிய பிறகு நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.

நான் என்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு அம்மாவாக நேரம், கவனிப்பு, அன்பு, உணவு போன்றவற்றை சரியாக கொடுக்கிறேனா என்பது மிகுந்த சவாலான ஒன்றாகதான் எனக்கு இருந்தது. ஆனால், உனக்குத் தேவையான எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அதை இந்த அளவிற்கு மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன் என்பதை நான் நினைக்கவே இல்லை.

1
இப்போது நீ புரண்டு படுக்கிறாய், இடமிருந்து வலம் நகருகிறாய், என் மேல் ஏறுகிறாய் இதெல்லாம் ஏதோ ஒரு இரவில் நடந்ததைப் போல தோன்றுகிறது. உனக்கு வந்த முதல் ஜலதோஷம், நெற்றியில் வந்த முதல் கட்டி, நீச்சல் குளம், கடலில் நீ குளித்தது, உணவுகளை நீ ருசிக்க ஆரம்பித்தது என எல்லாமே மிகவும் சீக்கிரமாக நடந்துவிட்டது.

இப்படியே போனால் நீ அடுத்த வாரத்தில் கல்லூரிக்குக் கூட போய் விடுவாய் என நானும் உன் அப்பாவும் இதைப் பற்றி பேசி சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தோம். நீ எங்களை எந்த அளவிற்கு பொறுப்புள்ளவர்களாக மாற்றி இருக்கிறாய். கடவுள் தான் உன் மூலமாக எங்களை ஆசிர்வதித்து உள்ளார்.

1
உன் அம்மாவாக இருப்பது மிகவும் சவாலான மதிப்புமிக்க வேலையாகவே கருதுகிறேன். நீ பிறந்து ஆறு மாதங்கள் ஆனதற்கு வாழ்த்துகள் என்னுடைய நீல்” என அதில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From Around the web